Sunday 17 March 2019

தோழர் ஏ.எம்.கே.அவர்களின் நினைவேந்தல் நிகழ்வின் நிழற்படக் காட்சிகள்

ந்திய பாட்டாளி வர்க்க புரட்சியின் விடிவெள்ளி தோழர் ஏ.எம்.கே.அவர்களின் நினைவேந்தல், நிருபர்கள் சங்கக் கட்டிடம் சேப்பாக்கம் ,சென்னையில் 17.03.2019, ஞாயிறு, மாலை 3.00 மணியளவில் ஆரம்பித்து சிறப்பாக நடந்தேறியது.

மத்திய மோடி அரசின் எடுபிடி ஆட்சியின் கருத்துச் சுதந்திரப்பறிப்பால் செங்கல்பட்டு, நகராட்சி திருமண மண்டபத்தில் 03.03.2019 அன்று நடத்தத் திட்டமிட்டிருந்த
முதல் கூட்டம் தடை செய்யப்பட்டது.

இக் கூட்டத்தில் கழகத் தோழர்களும், தோழர் தியாகு உள்ளிட்ட மாற்று அமைப்புத் தோழர்கள் பலரும், தோழர் ஏ.எம்.கே.அவர்கள் இந்தியப் பாட்டாளிவர்க்கப் புரட்சி இயக்கத்துக்கு ஆற்றிய பணிகள் குறித்து உரையாற்றினர்.

தோழர் மனோகரன் கொள்கை விளக்க நினைவுச் சிறப்புரை ஆற்றினார்.

இவை எவ்வாறு தோழர் ஏ.எம்.கே.அவர்கள், தன் முழு வாழ்நாளில் இந்திய பாட்டாளி வர்க்க புரட்சியின் விடிவெள்ளியாக உயர்ந்தார் என்பதை எடுத்தியம்பின.

பெண் தோழர் வெண்ணிலா சிறப்பாக உரையாற்றினார்.கலை நிகழ்வில் தோழியர் முக்கிய பங்காற்றினர்.

ஆண்கள் பெண்கள் முதியோர் சிறுவர் சிறுமிகள் என நூற்றுக்கணக்கானோர் தோழர் ஏ.எம்.கே.அவர்களின் நினைவை ஏந்தினர்.

உருவப்படச் செவ்வணக்கம் இடம்பெற்றது.

தோழர் ஏ.எம்.கே.அவர்களின் நினைவு நூலை, தோழர் தியாகு அவர்கள் மேடையில் பெற்றுக்கொண்டார்.

மக்கள் கலைமன்ற கலை நிகழ்வு இடம் பெற்றது.

கழகத்தின் நன்றி நவில்வை சபையோர் ஏற்க நினைவேந்தல் நிகழ்வு நிறைவு பெற்றது.

நினைவேந்தல் நிகழ்வின் நிழற்படக் காட்சிகள் சில:




















*ஏகாதிபத்திய புதிய காலனிய ஆதிக்கத்திற்குச்
சேவை செய்யும் கலைப்புவாதக் கருத்துகளை 
முறியடித்து புரட்சிகர இயக்கத்தைப் பாதுகாப்போம்!

*மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையின் ஒளியில்
ஏ.எம்.கே. வழியில்
புதிய ஜனநாயகப் புரட்சியினை முன்னெடுப்போம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம். தமிழ்நாடு
18-03-2019

Sunday 3 March 2019

தோழர் ஏ.எம்.கே அவர்களின் நினைவேந்தல் கூட்டத்திற்கு தடை


கழகம் கண்டனம்,

அறிவிக்கப்படாத மோடி,எடப்பாடி எமெர்ஜென்சியை எதிர்த்துப் போராட அறைகூவல்!



இந்திய கம்யூனிஸ்ட் மா-லெ (போல்சுவிக்) கட்சியின் தலைவர் தோழர் ஏ.எம்.கே அவர்களின் நினவேந்தல் கூட்டத்திற்குத் தடை.

இந்திய மார்க்சிய லெனினிய போல்சுவிக் கட்சியின் தலைவர் தோழர் ஏ.எம்.கே அவர்களின் நினைவேந்தல் கூட்டம் நாளை 03-03-2019 அன்று செங்கல்பட்டு நகராட்சி திருமண மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டு அனுமதி பெறப்பட்டிருந்தது.

எனினும் எடப்பாடி அரசு இன்று இக்கூட்டத்திற்கு தடை விதித்துள்ளது.

இக்கருத்துச் சுதந்திரப் பறிப்பைக் கண்டித்தும், இந்துத்துவப் பாசிச மோடி அரசின், தமிழக எடுபிடி எடப்பாடி ஆட்சியின் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியை எதிர்த்துப் போராடவும் கழகம் அறைகூவல் விடுத்துள்ளது.
___
@S.Rajan(kazakam)02-03-2019-Face Book