2019-மே நாள் வாழ்க!
பொதுக்கூட்டம் ஊர்வலம் - தர்மபுரி |
* ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது சுமத்துகின்ற பாசிசப் போக்குகளுக்கு எதிராக அணிதிரள்வோம்!
* நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உலகை மறுபங்கீடு செய்வதற்கான அமெரிக்க-நேட்டோ, ரஷ்ய-சீன ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையிலான பனிப் போரை முறியடிப்போம்!
* செல்வாக்கு மண்டலங்களை நிறுவத் துடிக்கும் அமெரிக்க-ரஷ்ய-சீன ஏகாதிபத்தியங்களே, வெனிசுவேலாவை விட்டு வெளியேறுங்கள்!!
இந்திய அரசே!
அமெரிக்காவுடனான அனைத்து இராணுவ, அணுசக்தி ஒப்பந்தங்களையும் ரத்து செய்! இந்தோ-பசிபிக் இராணுவக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறு!
இந்தியாவை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றும் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளைக் கைவிடு! உலக வர்த்தக அமைப்பு - (World Trade Organisation) WTO வை விட்டு வெளியேறு!
தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கும் சட்டத் திருத்தங்கள் அனைத்தையும் கைவிடு!
ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிப்போம்! 8 மணிநேர வேலை நாளுக்காகப் போராடுவோம்!
வேளாண் நெருக்கடிகளுக்கும், விவசாயிகள் தற்கொலைக்கும் காரணமான கார்ப்பரேட் வேளாண் கொள்கைகளை முறியடிப்போம்!
நிலச் சீர்திருத்தத்திற்காகப் போராடுவோம்!
சாதி, தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவுகட்டுவோம்!
சிறு, குறு தொழில்கள் மற்றும் வணிகர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஜி.எஸ்.டி. வரியைக் கைவிடு! ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்!
பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் மீது வரி போடு! கல்வி, மருத்துவம், சுகாதாரம் அனைத்தையும் மக்களுக்கு இலவசமாக வழங்கு!
ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்ப்போம்! தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவோம்!
காஷ்மீர் மீதான உள்நாட்டு யுத்தத்தை உடனே நிறுத்து! படைகளை திரும்பப் பெறு! பொதுவாக்கெடுப்பு நடத்து!
புதிய காலனிய ஆதிக்கத்திற்கும் கார்ப்பரேட் நலன்களுக்கும் சேவை செய்யும் இந்துத்துவப் பாசிசத்திற்கு எதிராகப் போராடுவோம்!
அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் 124A, தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA), சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் (UAPA), இராணுவ சிறப்புச் சட்டங்கள் அனைத்தையும் திரும்பப் பெறு!
மோடியின் எடுபிடி எடப்பாடி அரசே! பொன்பரப்பி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி வெறி தாக்குதல் நடத்திய இந்து முன்னணி, பா.ம.க. குண்டர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு!
மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை வெல்க!
உலகத் தொழிலாளர்களே! ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
ஏப்ரல்-2019
No comments:
Post a Comment