துடுப்பதி கழகத் தோழர் ஜம்புலிங்கம் |
தனக்காக வாழ்ந்து மடிவதென்பது இறகை விட இலேசானது. மக்களுக்காக வாழ்ந்து மடிவதென்பது மலையை விட கடினமானது.துடுப்பதி தோழர் ஜம்புலிங்கம் இத்தகைய ஒரு கடினமான வாழ்வை ஏற்று வாழ்ந்து எம்மைப் பிரிந்தவர்.
இந்திய நாட்டினது விடுதலைக்காகவும்,உழைக்கும் விவசாய மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவும் புரட்சிகரமான வழியில் போராடிய மாபெரும் நக்சல்பாரி இயக்கத்தின் இடது தீவிரவாத விலகலை சுயவிமர்சன பூர்வமாக ஆய்வுசெய்து, அரசியல் போர்த்தந்திர மக்கள் திரள் பாதையில் கழகப் பணி ஆற்றியவர்.
இதனால் துடுப்பதி வாழ் மக்கள் நெஞ்சங்களில் வாழ்கின்றவர்,
அவரின் உருவப் படத் திறப்பு விழாவும், சிறப்பு நினைவேந்தல் பொதுக்கூட்டமும் 29/05/16 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் சிறப்பாக நடந்தேறியது.
நிகழ்ச்சிக்குத் ம ஜ இ க தோழர் முத்து அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
தோழர் ஆறுமுகம் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
தோழர் ஞானம் ம ஜ இ க மாநில அமைப்பாளர் சென்னை,சிறப்புரை ஆற்றினார்.
தோழர் ஜீவா,தோழர் ஜம்புலிங்கத்தின் உருவப் படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார்.
தோழர் சோமு ம ஜ இ க சேலம், நாமக்கல் ஈரோடு மாவட்ட அமைப்பாளர்.
தோழர் ஸ்டாலின் ம ஜ இ க சேலம்,
தோழர் தேவேந்திர மாணிக்கம் ஊராட்சி மன்ற தலைவர்,தே மு தி க.
தோழர் தர்மராஜ் ம ஜ இ க விஜய மங்கலம்,
ஆகியோர் உரையாற்றினார்கள்,
கவிஞர் குணசேகரன் நினைவேந்தல் கவிதை வாசித்தார். சாதசிவம் கவிதை வாசித்தார்.
மக்கள் கலை மன்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது,
முதியோர் சிறியோர், தாய்மார் தந்தையர்கள்,பெண்கள் ஆண்கள், சிறுவன்கள் சிறுமியர்கள்,உழைக்கும் மக்கள், கழகத் தோழர்கள் என மக்கள் திரள் கழகக் கருத்துக்களை செவி மடுத்தது.
கலை நிகழ்வுகளைக்,கண்டு களித்தது.
தோழர் தேவாராஜ் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவேறியது.
நன்றி தகவல்: SR.ம.ஜ.இ.க
No comments:
Post a Comment