கனுசன்யாலின் வலது சந்தர்ப்பவாத நிலைப்பாடும் கட்சி ஐக்கியத்திற்கான
முயற்சிகளும் பிளவுகளும்
முன்னுரை-பகுதி1
===============
எமது அமைப்பு கலைப்புவாதப் போக்குகளின் காரணமாக கடந்த 20
ஆண்டுகளில் நான்கு பிளவுகளைச் சந்தித்துள்ளது. இவ்வாறு எமது அமைப்பிலும் பிற மா.லெ.புரட்சிகர அமைப்புகளிலும் கலைப்புவாதம்
தோன்றுவது என்பது ஒரு தனித்த நிகழ்வு அல்ல. சர்வதேசிய அளவில்
கோர்ப்பச்சேவ் துவக்கி வைத்த கலைப்புவாதப் போக்கு ஏற்படுத்திய உலகுதழுவிய நிகழ்வுப் போக்கின் ஒரு பகுதியேயாகும். கலைப்புவாதப்
போக்குகளால் அமைப்பு பிளவுபடுவது என்பது எமது அமைப்புக்கு மட்டுமே உரியதல்ல.இது ஒரு உலகு தழுவிய போக்காகும்.
பிற்போக்குத் தாக்குதல், நெருக்கடிகள், பின்னடைவுக் காலங்களில்
திரிபுவாதம் மற்றும் கலைப்புவாதப் போக்குகள் தோன்றுகின்றன என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உலகக் கம்யூனிஸ்டு இயக்கத்தில் உள்ளன. இன்று உலகு தழுவிய (world wide) எதிர்ப் புரட்சி மீண்டும் ஒரு முறை உலகெங்கும் கம்யூனிஸ்டு இயக்கத்தில், திரிபுவாதம் மற்றும் கலைப்புவாதம் தோன்றுவதற்கான செழுமையான விளை நிலத்தை (fertile land) வழங்கியுள்ளது. இந்தச் சூழலில், கடந்த காலத்தில் புரட்சியாளர்களாக இருந்தவர்கள் பலர் உலகெங்கும் நிகழ்வதைப் போலவே - நமது நாட்டிலும் குட்டி முதலாளித்துவச் சிந்தனையாளர்களாக இருந்தவர்கள் - இன்று
திரிபுவாதம் மற்றும் கலைப்புவாதத்தை வழிபடுவோர்களாக -
தொழுவோர்களாக மாறியுள்ளனர். புரட்சிகரமான கம்யூனிஸ்டு
கட்சிகளைவிட்டு வெளியேறுகின்றனர். அவ்வாறு வெளியேறுவதால் அமைப்பு கலைந்து போவதைக்காட்டி அமைப்புத் தலைமைதான் கலைப்புவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்துகின்றனர்.
எனவே எமது அமைப்பிற்குள் தோன்றியுள்ள கலைப்புவாதப் போக்குகளை ஆய்வு செய்வதற்கு முன்னால் கலைப்புவாதம் என்றால் என்ன, கலைப்புவாதம் பற்றி மார்க்சியம் லெனினியம் பொதுவாக எவ்வாறு வரையறை செய்கிறது என்பதையும், குறிப்பாக இன்றைய கட்டத்தில் கோர்ப்பச்சேவ் கலைப்புவாதம் பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும்.
அதுவே எமது அமைப்பிற்குள் தோன்றிய கலைப்புவாதம் பற்றி ஆய்வு செய்வதற்கும், அது குறித்த தெளிவு பெறுவதற்குமான தத்துவ அடிப்படையாக அமையும்.
___
தொடர்ச்சிகளுக்கு:

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15

நவீன திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் எதிர்த்துப் போராட ஓரணி திரள்வோம்!
சமரன் தொடர்1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
No comments:
Post a Comment