Tuesday 4 April 2017

தமிழக விவசாயிகளின் டெல்கிப் போராட்டம் வெல்க!

தமிழக விவசாயிகளின் டெல்கிப் போராட்டம் வெல்க!

புதுடெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 26-03-2017 முதல் 21 நாட்களாக (04 -04-2017), விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஐய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள்  போராட்டம் நடத்தி வருகின்றனர்.


கடந்த சனிக்கிழமையன்று , ஜந்தர் மந்தரில் , சாலையில் விவசாயி ஒருவரை படுக்க வைத்து, மாலையிட்டு, மலர்களைப் போட்டு அலங்கரித்து, வாயில் துணியை மூடி, விவசாயிகளின் தற்கொலையை, சடலம் போல சித்தரித்தனர். அருகில் மண்டை ஓடுகளை வைத்து சுற்றிலும் அமர்ந்து கொண்டு, சங்கு ஊதியவாறு ஒப்பாரிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இப்போராட்டம் வெற்றி பெறக் கோரி கழகம் வெளியிட்ட பிரசுரமும், முன் வைத்த முழக்கங்களும் கீழ் வருமாறு:

* டெல்லியில் நடக்கும் தமிழக விவசாயிகளின் போராட்டம் வெல்க!

* மோடி அரசே! விவசாயிகளின் கோரிக்கைகளை உடனே அமல்படுத்து!


* எடப்பாடி அரசே! விவசாயிகளுக்கு ஆதரவாக அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர் மக்கள் எழுச்சியை நசுக்காதே!


* வேளாண்துறை நெருக்கடிக்கும், விவசாயிகளின் தற்கொலைக்கும் காரணமான கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான வேளாண் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவோம்!


 

No comments:

Post a Comment