Tuesday 27 October 2015

ஈழ ஆதரவு, சாதி மத பாசிச எதிர்ப்பு, கழகக் கூட்ட காட்சி அறிக்கை

ஈழத்தமிழினப் படுகொலைக்கு சர்வதேச விசாரணையை மறுத்து, கொலைகாரர்களையே நீதிபதிகளாக்கும், அமெரிக்காவின் மேலாதிக்கத்தை இந்தியாவின் விரிவாதிக்கத்தை எதிர்த்தும், தமிழகத்தில் மதவாத சாதி வாத பாசிசத்தை எதிர்த்தும், 

ஒரு பொதுக்கூட்டத்துக்கு மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் ஏற்பாடு செய்தது.

இதில் இணைந்து கொள்ளுமாறு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விட்டது.

சுமார் 10 அமைப்புகள் இக்கூட்டத்தில் பங்குபற்றி பொது முழக்கம் சார்பில் கருத்து பகிர்ந்தனர்.

பொதுக்கூட்டம் 26 10 2015 திங்கள் மாலை இண்டூர் பேரூந்து நிலையம் அருகில் அரங்கேறியது.
மேடை ஏந்திய பதாகை

பொதுகூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் தோழர் பெரியண்ணன் 
ம ஜ இ க வரவேற்றார் . 

தோழர் மாயகண்ணன் ம ஜ இ க மாவட்ட அமைப்பாளர் பொதுகூட்டத்திற்கு தலைமை தாங்கினார் .

தோழர் அசோகன் ம தி மு க தருமபுரி , தோழர் தோழர் நந்தன் இ.சி எ 
( வி சி )தருமபுரி  தோழர் சிவராமன் சாதி ஒழிப்பு முன்னணி பொது செயலாளர் , சாந்தி பூசன் நாம் தமிழர் கட்சி தருமபுரி மாவட்ட அமைப்பாளர் (மேற்கு ) , தோழர் முனி ஆறுமுகம் தே மு தி க பொது குழு உறுப்பினர் .தோழர் சந்தோஷ் குமார்தருமபுரி மாவட்ட தலைவர் திராவிட விடுதலை கழகம் ,தோழர் கார்த்திக் த. தொ .மு ஓசூர் ,தோழர் துரைராஜ் மாநில செயலாளர் மனித உரிமை கட்சி தோழர் திருமலை ம ஜ இ க தருமபுரி,தோழர் பழனி ம ஜ இ க தருமபுரி தோழர் பச்சியப்பன் ம ஜ இ க தருமபுரி ஆகியோர் உரையாற்றினார் .


தோழர் மனோகரன்:கொள்கை விளக்க விரிவுரை

 ம ஜ இ க   தோழர் மனோகரன் கழக நிலைப்பாடுகளை விளக்கி புரட்சிகர விரிவுரையாற்றினார்.

மக்கள் கலை மன்ற நிகழ்வு

கழக, மக்கள் கலைமன்ற கலை நிகழ்வு  இடம் பெற்றது,

பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிய பொதுமக்கள், அரசியல் சொற் பொழிவுகளையும், கலை இலக்கிய பிழிவுகளையும், அமைதியாக செவி மடுத்து சிந்தித்தனர்! 

சொற்பொழிவுகளை செவிமடுக்கும் மக்கள் 
இறுதியில் தோழர் முருகன் நன்றியுரையுடன் கூட்டம்  நிறைவு பெற்றது.
இப்பொதுக்கூட்டம் வெற்றிபெற உழைத்த அனைவருக்கும் கழகம் தன் நன்றியை மீண்டும் தெரிவித்து நிற்கிறது.



Monday 12 October 2015

ஈழ இனப்படுகொலையை மூடிமறைக்கும் அமெரிக்க இந்திய அரசுகளை அம்பலப்படுத்தி கழகம் பொதுக்கூட்டம்.

ஈழத் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச விசாரணையை மறுத்து, கொலைகாரர்களையே நீதிபதிகளாக்கும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தையும், இந்தியாவின் விரிவாதிக்கத்தையும் எதிர்த்துப் போராடுவோம்!
*  சர்வதேச விசாரணையை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்று கூறும் சிங்கள இனவெறி இலங்கை அரசை எதிர்ப்போம்!

*  சர்வதேச விசாரணை கோரும் தமிழகச் சட்டமன்றத் தீர்மானத்தை ஏற்க மறுத்து சிங்கள இனவெறி அரசுக்குத் துணைபோகும் மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!

*  தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பிற்காக அணிதிரள்வோம்!
கழகப் பொதுக்கூட்டம் 



அனைவரும் வருக!                                                 ஆதரவு தருக!!