Wednesday 27 December 2017

தினகரனின் வெற்றி- கிரிமினல் மாஃபியா ஜெயா-சசி கும்பலுக்கு கிடைத்த வெற்றியே!

தினகரனின் வெற்றி-
கிரிமினல் மாஃபியா ஜெயா-சசி கும்பலுக்கு கிடைத்த வெற்றியே!

*மோடியின் அடிவருடி அதிமுக ஆட்சிக்கு
மாற்று-தினகரனோ தி.மு.க கூட்டணியோ
அல்ல!

*புரட்சிகர ஜனநாயக சக்திகளே மாற்று!

*தேசிய இனங்கள், மதச் சிறுபான்மையினரின்  உரிமைகளைப்
பறித்து, புதிய காலனியாதிக்கத்திற்கு
சேவைசெய்யும் இந்துத்துவப்பாசிச
மோடி ஆட்சியை 
எதிர்த்துப் போராடுவோம்!


மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
தமிழ்நாடு.டிசம்பர் 2017

Wednesday 25 October 2017

`நீட்` எதிர்ப்பு கழக ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர்

 நீட்-எதிர்ப்பு கழக ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர்



----------------------------------------------------------------------------------------------------------------------
                                                                                                                                        குறிப்பு:

Samaran Samaran திருத்தம்:  பழைய பதிவில் திருப்பூர் என்பதை திருப்பத்தூர் எனத் திருத்திப் படிக்க நன்றி, தவறுக்கு மன்னிக்க!

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Tuesday 12 September 2017

2017- செப்டெம்பர் 12 தியாகிகள் நினைவு நீடூழி வாழ்க!

 
செப்டம்பர் 12 தியாகிகள் நினைவு நீடூழி வாழ்க!
 
ஏகாதிபத்திய கார்ப்பரேடுகளுக்கு சேவை செய்யும் ஜீ.எஸ்.டி. சட்டத்தையும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும்
 
போராடுவோம்!
 
பொது கூட்டம்....எண்ணுர் சென்னை
 
 

 

 

Friday 8 September 2017

அனிதா படுகொலை கழக ஆர்ப்பாட்டம் உத்திரமேரூர்-பாபநாசம்

கண்டன ஆர்ப்பாட்டம் உத்திரமேரூர் பேருந்து நிலையம்

அனிதா ஆர்ப்பாட்டம் உத்திரமேரூர்


08/09/2017 மாலை 4மணியளவில் தோழர் கார்த்திக்கேயன் ம.ஜ.இ.க தலைமையில் நடைப்பெற்றது. தோழர் மனோகரன் ம.ஜ.இ.க சென்னை, தோழர்.மணி ம.ஜ.இ.க சென்னை ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

*மோடி கும்பல்
 ஆட்சியினை
 வரிந்துகட்டி ஆதரித்து
 நீட் தேர்வை
 அனுமதித்து
 தமிழகத்திற்கு
 துரோகம் செய்யும்
 மோடி கும்பலின்
 அடிவருடி
 எடப்பாடி கும்பலே
 வெளியேறு,வெளியேறு
ஆட்சியைவிட்டு
 வெளியேறு!

 
 *சமூக நீதியை
 அழிக்கின்ற
 நீட் தேர்வு
 முறைதன்னை
 ஒழித்துக்கட்டப்
 போராடுவோம்!
 
ஒழித்துக்கட்டப்
 போராடுவோம்!
 
 
*இந்திய நாட்டுச்
 சிறையினிலே
 ஒடுக்கப்பட்டுக்
 கிடக்கின்ற
 அனைத்து மாநில
 அதிகாரத்தை
 பறிக்கின்ற நீட்
 தேர்வை
 ஒழித்துக்கட்டப்
 போராடுவோம்!

ஒழித்துக்கட்டப்
 போராடுவோம்!


 *சுகாதாரம், மருத்துவத்துறையை
 கபளீகரம் செய்திடவே
 கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடும்
 நீட் தேர்வு முறைதன்னை
 ஒழித்துக்கட்டப் போராடுவோம்!
ஒழித்துக்கட்டப் போராடுவோம்!
 
 
*சுகாதாரம் மருத்துவத் துறையை
 கார்ப்பரேட்டுகளுக்குத் திறந்து விட
 வழிவகை செய்யும் நீட் தேர்வை
 வடிவமைத்துத் திணிக்கின்ற
 உலக வர்த்தகக் கழகமெனும்
 புதிய காலனி ஆதிக்க
 அமைப்பைவிட்டு வெளியேறு!
இந்திய அரசே வெளியேறு!
உலக வர்த்தக கழகத்தைவிட்டு
 இந்திய அரசே வெளியேறு.
 
கூடி நின்ற மற்றும் சுற்றுப்புறங்களில் சென்ற மக்கள் மத்தியில் ம.ஜ.இ.க தோழர்கள் மேற்கண்ட முழக்கங்களை ஒலிபெருக்கியில்  முழங்கினர்.
 
கண்டன ஆர்ப்பாட்டம் பாபநாசம்

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் தோழர் ரணதீபன் தலைமையில் பாபநாசத்தில் 04. 09. 2017 அன்று மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .நீட் தேர்வைத் திணித்து அனிதாவைப் படுகொலைசெய்த மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடும் கழக ஆர்ப்பாட்டங்களின் ஓரங்கமாக பாபநாசத்தில் தோழர் மணிவண்ணன் ம.ஜ.இ.க சிதம்பர வட்டார அமைப்பாளர். தோழர் குமார் ம.ஜ.இ.க திருச்சி மாவட்ட அமைப்பாளர் .தோழர் தெய்வ சந்திரன் ம.ஜ.இ.க கடலூர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ம.ஜ.இ.க தோழர்கள் கண்டன முழக்கமிட்டனர்.
 
அனிதா ஆர்ப்பாட்டம் பாபநாசம்





 
 
 
 
 
தகவல், புகைப்படம் : Com SR

Thursday 7 September 2017

அனிதா படுகொலை: கழக கண்டன ஆர்ப்பாட்டம் உத்திரமேரூர்



நீட்` தேர்வைத் திணித்து அனிதாவைப் படுகொலை செய்த மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!

⛤தமிழகத்திற்கு துரோகம் செய்யும் "மோடியின் அடிவருடி"எடப்பாடி கும்பலே,  ஆட்சியைவிட்டு வெளியேறு!

⛤சமூகநீதியை ஒழிக்கும்,

மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும், கார்ப்பரேட்களுக்கு சேவைசெய்யும் நீட்` தேர்வை ஒழிக்கப் போராடுவோம்!
 
 
 
கண்டன ஆர்ப்பாட்டம்
 உத்திரமேருர் பேருந்து நிலையம்
08/09/2017 மாலை 4மணி
மக்கள்   ஜனநாயக   இளைஞர் கழகம்
சென்னை செங்கை
தமிழ்நாடு . Cell:9382815231.

Monday 4 September 2017

மருத்துவ மாணவி அனிதா படுகொலை: கழகம் கண்டன ஆர்ப்பாட்ட மறியல்!

மருத்துவ மாணவி அனிதா
மருத்துவ மாணவி அனிதா படுகொலை: கழகம் கண்டன ஆர்ப்பாட்ட மறியல்!

இந்திய மைய அரசு, மாநில அரசாங்களதும், சமூக நீதி ஆர்வலர்களதும்  பலத்த  கண்டனங்களைக் கணக்கில் எடுக்காமல் 2016 ஆம் ஆண்டு அமுலாக்கிய, The National Eligibility Entrance Test (NEET)[`தேசிய தகமை அனுமதித் தேர்வு`] விளைவாக, சுமை தூக்கும் கூலித் தொழிலாளியின் மகளும்,, அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூக மாணவியுமான அனிதா, மருத்துவ மேற்படிப்புக்கான தகுதி பறிக்கப்பட்டதால் மன விரக்தி அடைந்து 04-09-2017 ஞாயிறு  மாலை அன்று தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.


அனிதா கழக ஆர்ப்பாட்டம்
 
 இப்படுகொலையைக் கண்டித்து, மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் தர்மபுரி மாவட்ட அமைப்பாளர் தோழர் மாயக்கண்ணன் தலைமையில், தருமபுரி நான்குரோடு இலிருந்து தருமபுரி உள்ளுர் பேருந்து நிலையம் , வெளியூர் பேருந்து நிலையம் வரை இன்று காலை 10.30 யிலிருந்து 12.00 மணி வரை ஊர்வலம், ஆர்ப்பாட்டம், மறியல் என மக்களை போராட்டத்திற்கு அழைத்து செல்லும் வகையில், ம.ஜ.இ.க வின் போராட்டம் நடைபெற்றது.


 
நீட்' தேர்வை திணித்து அனிதாவை படுகொலை செய்த மோடி ஆட்சியை எதிர்த்தும் , தமிழகத்திற்கு துரோகம் செய்யும் மோடியின் அடிவருடி எடப்பாடி கும்பலை ஆட்சியை விட்டு வெளியேற வலியுறுத்தியும், சமூக நீதியை ஒழிக்கும், மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும், கார்ப்பேரேட்டுகளுக்கு சேவை செய்யும் நீட்` தேர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் மக்கள் ஜனநாயக இளைஞர் கழக தோழர்கள் கண்டனம் முழங்கினர்.
















மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் வாழ்க,வாழ்க வாழ்கவே!
 
மார்க்சிய லெனினிய மா ஓ சிந்தனை வெல்க,வெல்க வெல்கவே !!
ஆகஸ்ட்                                                                                  2017
 

Friday 1 September 2017

ஒன்றுபட்ட முன்னணி அமைத்து ஜி.எஸ்.டி. வரியை எதிர்த்துப் போராடுவோம்!


Thursday, August 31, 2017

மோடிஅரசே…!

பன்னாட்டு உள்நாட்டுக் கார்ப்பரேட்

முதலாளிகளுக்கு சேவை செய்யும் 'ஜி.எஸ்.டி' வரியை

திரும்பப் பெறு!!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

மத்தியில் ஆளும் இந்துத்துவப் பாசிச மோடி அரசாங்கம், கடந்த ஜூன் 30-ஆம் நாள் நள்ளிரவில் “பொருட்கள் மற்றும் சேவை வரிச்சட்டத்தை (ஜி.எஸ்.டி) அமல்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி என்ற பேரில் பொருளாதாரம் மற்றும் வரிவிதிக்கும் அதிகாரத்தை நாடாளுமன்ற, சட்டமன்றங்களிடம் இருந்து பறித்து, பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைத்துவிட்டது. 1947, ஆகஸ்ட்-15 நள்ளிரவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் இருந்து அரசியலதிகாரம் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டது. ஆனால், ஜூன் 30 நள்ளிரவில் மோடி நடத்திய நாடாளுமன்றக் கூட்டம் பொருளாதார மற்றும் வரிவிதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க நாட்டின் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைத்துவிட்டது.

இதற்கு முன்னர் மத்திய அரசு உற்பத்தி (கலால்) வரி, சேவை வரிகளையும்; மாநில அரசுகள் தனித்தனியே விற்பனை வரியையும் விதித்து வந்தன. தற்போது ஜி.எஸ்.டி. மூலம் அத்தகைய பன்முக வரிகளை ஒழித்து 5%, 12%, 18%, 28% என்ற படிநிலையில் ஒரே வரியாக மாற்றியுள்ளது. ஒரு நாடு, ஒரு சந்தை, ஒரு வரி என்ற பேரில் இந்தியச் சந்தையை பன்னாட்டு உள்நாட்டு லாஜிஸ்டிக் கம்பெனிகளுக்கு திறந்து விட்டுள்ளது. இதனால் அந்நிய மூலதனம் குவியும்; நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி (GDP) 2-சதவீதம் வளர்ச்சியடையும்; அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் என்று மோடி கும்பல் வாய்ச்சவடால் அடிக்கிறது. அது உண்மையல்ல. ஆனால், உலக வர்த்தகக் கழகம் மற்றும் அமெரிக்காவின் லாஜிஸ்டிக் (பொருள் வர்த்தகம் மற்றும் பொருட்கள் கையாளுகை) கம்பெனி முதலாளிகளின் ஆணைகளை ஏற்று வரிவிதிக்கும் அதிகாரத்தை பன்னாட்டு, உள்நாட்டுக் கம்பெனிகளிடம் ஒப்படைத்துவிட்டது.

ஜி.எஸ்.டி. - வரிச் சட்டத்தால் பயனடைவோர் யார்?  
      
நாட்டின் ஒட்டுமொத்த வரிவருவாயில் 65 சதவீதம் மறைமுக வரிகள் மூலம் மக்களிடமிருந்து கசக்கிப்பிழியப்பட்டது. இனி அது மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டது. இந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை - இனி ஜி.எஸ்.டி. கவுன்சில்  - மூலம் கார்ப்பரேட்டு வல்லுனர்களால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படும். ஏற்கனவே புதிய கார்ப்பரேட்மய தாராளக் கொள்கைகளால் பொருட்களின் விலைகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை கார்ப்பரேட் சந்தை சக்திகளிடம் ஒப்படைத்து விட்டனர். தற்போது வரிவிதிக்கும் அதிகாரத்தையும் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டனர். இவ்வாறு இறக்குமதிப் பொருட்களுக்கான தடைகளை அகற்றுவது, வரிகளைக் குறைப்பதுடன் மாநிலங்களின் சுங்க எல்லைகள் தகர்க்கப்பட்டு தங்குதடை எதுவுமின்றி இந்தியச் சந்தை முழுவதையும் அமெரிக்காவின் லாஜிஸ்டிக் கம்பெனிகளுக்கும், அம்பானி, அடானி போன்ற உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கும் திறந்துவிடுகிறது.

ஆன்-லைன் வர்த்தகத்தில் உலகின் நம்பர் ஒன் நிறுவனமான அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் மற்றும் பிளிப்கார்ட், ஸ்நேப் டீல் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும்; மக்கள் அதிகம் பயன்படுத்தும் நுகர் பொருட்களின் உற்பத்தியில் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் பகாசுர நிறுவனங்களான யூனிலிவர், கோல்கேட், கிளைக்கோஸ்மித்லைன், கொக்ககோலா, நெஸ்லே மற்றும் ரெக்கிட்பென்ஸ்கியர் போன்ற நிறுவனங்களும்; உலகுதழுவிய அளவில் நகர்ப்புற போக்குவரத்து சேவையில் கொடிகட்டிப் பறக்கும் ஊபர் நிறுவனம்; உலகுதழுவிய அளவில் வேளாண்மைத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் மான்சான்டோ நிறுவனம்; ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனியும், போர்டு, டைம்லர், மைக்ரோசாஃட் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பைடு (ஙிணீவீபீu) என்ற சீன நிறுவனமும் மோட்டார்வாகனப் போக்குவரத்துத் துறையில் ஒரு “ஆண்டிராய்ட் செயலியை” உருவாக்கி அத்துறையில் தங்களது கட்டுப்பாட்டைக் கொண்டு வருகிறது. எனவே ஜி.எஸ்.டி. வரி என்பது சில்லரை வர்த்தகம் முதல் கல்வி மருத்துவம் வரை அனைத்து சேவைகள் மற்றும் வர்த்தகத்தை பன்னாட்டுப் பகாசுர கார்ப்பரேட்டுக்களிடம் ஒப்படைப்பதாகும். அத்துடன் முதலாளித்துவ நெருக்கடியின் விளைவாக திவாலாகிவரும் அரசாங்கத்தின் கஜானாவை நிரப்ப சிறு, குறு தொழில்முனைவோர், தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் பரந்துபட்ட மக்கள் மீது கொடிய வரிகளைச் சுமத்துவதற்காக கொண்டு வரப்பட்டதுதான் ஜி.எஸ்.டி வரி சட்டம்.

ஜி.எஸ்.டி-யால் பாதிக்கப்படுவோர் யார்?

ஜி.எஸ்.டி வரியால் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், தேசிய மற்றும் சிறு, குறு தொழில் முனைவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாரம்பரிய தொழில்களான ஜவுளி, ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, விசைத்தறி, தீப்பெட்டி, பட்டாசு, பீடி, முந்திரி மற்றும் தோட்டப்பயிர் போன்ற தொழில்கள் மீது 18 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. உப்பு மீது 28 சதவீதம் வரியை விதித்துள்ளது. மேலும் கடலைமிட்டாய் முதல் மாவரைக்கும் கிரைண்டர் மெஷின் வரை சிறு, குறு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு 28 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஏற்கனவே பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் முடங்கிப்போன தேசிய மற்றும் சிறு, குறு தொழில்கள் அழிவை நோக்கித் தள்ளப்பட்டுள்ளன. அத்துடன் ஆன்லைன் வர்த்தகமும் சேர்ந்து கொண்டு 4 கோடி வணிகர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிறது.

ஜி.எஸ்.டி சட்டம் அமல்படுத்துவதற்கு முன்பு ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள்தான் கலால் வரி வரம்பிற்குள் (உற்பத்தி வரி) கொண்டுவரப்பட்டது. இனி அந்த வரம்பு வெறும் ரூ.20 லட்சமாக மாற்றப்பட்டு விட்டது. மேலும் வரியை கட்டுவதற்கான கணினி முறைகளுக்கு இந்நிறுவனங்கள் மாறவேண்டும். வருடத்திற்கு 37 முறை வருமான வரி கணக்குகளை இவர்கள் தாக்கல் செய்யவேண்டும். அதற்கான ஊழியரை நியமித்துக் கொள்ள வேண்டும். இதனால் தமிழகத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்ட 1.62 லட்சம் தொழில்களும் மற்றும் பதிவுசெய்யப்படாத பல லட்சம் சிறு, குறு தொழில்களும் கடுமையாகப் பாதிக்கின்றன. அவை அழிவை நோக்கி தள்ளப்படுகின்றன.

இந்நிலையில் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்படுவதால் கோடிக் கணக்கான தொழிலாளர்களின் வேலை பறிபோகும் அபாயம் உருவாகி உள்ளது. அத்துடன் ஜி.எஸ்.டி-யால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து உண்மையான ஊதியம் குறைக்கப்பட்டு தொழிலாளர்களின் வாழ்நிலை அதலபாதாளத்தில் தள்ளப்படும். அவர்கள் கூடுதல் நேரம் உழைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும். எட்டுமணி நேர வேலை கனவாக மாறும். ஏற்கனவே மோடி அரசாங்கம் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளையெல்லாம் பறித்து அவர்களை கொத்தடிமைகளாய் மாற்றி வருகிறது.

ஜி.எஸ்.டி மூலம் உரம், பூச்சிமருந்துகள் மீது 18-சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால் இடுபொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. அதேசமயம் ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் வேளாண் விளைபொருட்களுக்கு வரி குறைக்கப்படும். அந்நிய நாட்டு வேளாண் விளைபொருட்கள் இந்திய சந்தையில் கொட்டி குவிக்கப்படும். அதனால் வேளாண் விளைவிளைபொருட்களின் விலை வீழ்ச்சியடையும். இந்திய விவசாயிகள் போட்டி போடமுடியாமல் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை தீவிரமடையும். ஏற்கனவே உலக வர்த்தகக் கழகத்துடனான உடன்படிக்கை காரணமாக விவசாயிகளிடமிருந்து ஆதார விலையின் அடிப்படையில் தானியங்களை கொள்முதல் செய்வதை இந்திய அரசு குறைத்துக் கொண்டது. நியாய விலைக்கடைகளை மூடவும் மோடி கும்பல் துவங்கிவிட்டது. ஏற்கனவே விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் மூன்று லட்சம் பேர் தற்கொலை செய்து மாண்டு வரும் நிலையில் ஜி.எஸ்.டி சட்டம் விவசாயிகளுக்கு மற்றொரு தூக்குக் கயிறுதான்.

மக்களை வதைக்கும் கொடிய வரி

ஜி.எஸ்.டி வரி விதிப்பால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அதியாவசியப் பொருட்களின் விலை குறையும் என்று மோடி கும்பல் கூறியது. ஆனால், ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் மூலம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 509-பொருட்களுக்கு புதிதாக வரிவிதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களில் விற்கப்படும் இட்லி தோசைகளின் விலை உயர்ந்துவிட்டது. ஒரு வேளை சாப்பாட்டிற்கு 10 ரூபாய் ஜி.எஸ்.டி வரி ஏறிவிட்டது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.32 அதிகரித்துள்ளது. ஆனால் சொகுசு கார்கள் முதல் பீட்சா, பர்கர் வரையில் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் பொருட்களுக்கு 6-சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்பட்டுள்ளன.

உயிர்காக்கும் மருந்துகளுக்கு 9-முதல் 18-சதவிகிதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதோடு குடி தண்ணீர் விலை கேன் ஒன்றுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. மாணவர்கள் பயன்படுத்தும் நோட்டுப்புத்தகங்கள், பெண்கள் உபயோகிக்கும் நாப்கின்கள் ஆகியவற்றின் விலை உயர்ந்து விட்டது. அத்துடன் பெட்ரோல், டீசல், மின்சாரம், சாராயம் போன்ற பொருட்களை ஜி.எஸ்.டி-யில் கொண்டுவராமல் 50 முதல் 250 சதவிகிதம் வரையிலான அதீத வரிவிதிப்பு தொடர்கிறது. இவ்வாறு மக்கள் மீது கொடிய வரிச்சுமைகளை மோடி கும்பல் சுமத்தியுள்ளது.

ஜி.எஸ்.டி சட்டத்தை எதிர்ப்பதில் எந்த ஒரு நாடாளுமன்றவாதக் கட்சிகளுக்கும் உறுதியான நிலை இல்லை. காங்கிரஸ் திமுக அணியும் அல்லது பாஜக தலைமையிலான அணியும் ஆட்சியிலிருக்கும் போது இச்சட்டத்தை அமல்படுத்த முயற்சி செய்வதும் எதிர்கட்சியாக மாறும்போதுடு எதிர்ப்பது போலவும் நடிக்கின்றன. ஜி.எஸ்.டி-யை எதிர்ப்பதாகக் கூறும் மார்க்சிஸ்ட் கட்சியும் கூட ஜி.எஸ்,டி-யை கொண்டுவர ஆதரவு கொடுத்தக் கட்சிதான். தமிழகத்தை ஆளும் எடப்பாடி ஆட்சி சசிகலாவின் பினாமியாகத் துவங்கி மோடியின் எடுபிடி ஆட்சியாக மாறிவிட்டது. அது ஜி.எஸ்.டி சட்டத்தை ஆதரிப்பதோடு மோடி அரசை எதிர்ப்போர் மீது எஸ்மா சட்டத்தையும், குண்டர்கள் தடைச் சட்டத்தையும் ஏவி ஒடுக்குகிற ஒரு கங்காணி ஆட்சியாக திகழ்கிறது. இக்கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தை கணக்கில் கொண்டுதான் ஜி.எஸ்.டி-க்கு எதிரான போராட்டத்தை நடத்த வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரியை எதிர்த்துப் போராடுவோம்

தொகுத்துக் கூறினால், இந்துத்துவப் பாசிச மோடி கும்பல் அமல்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி. சட்டம், மாநிலத்தின் வரிவிதிப்பு அதிகாரத்தைப் பறித்து அதன் வரி வருவாயை சூறையாடி, கஜானாவை காலியாக்கி, தேசிய இனங்களை ஓட்டாண்டியாக்குகிறது. நாட்டின் சிறு, குறு தொழில்களையும் வர்த்தகத்தையும் அழித்து கொடிய வரிவிதிப்பின் மூலம் பல கோடி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சட்டமாகும். மோடி கும்பலின் மேக் இன் இந்தியா திட்டமும் ஜி.எஸ்.டி சட்டமும் விவசாயிகளை மட்டுமல்ல இந்தியாவையே “சூசைட் இந்தியாவாக்கி” சுடுகாடாக்கும் திட்டமாகும். அன்று காலனிய ஆட்சி வைஸ்ராய்களின் மூலம் வரிவசூல் செய்து கொள்ளையடித்தது. இன்று வைஸ்ராய் இடத்தில் பிரதமர் அமர்ந்து கொண்டு வரிவசூல் செய்து அமெரிக்காவுக்குக் கப்பம் கட்டும் அரசாக - புதிய காலனி அரசாக - இந்தியாவை மாற்றிவருகிறார். எனவே மீண்டும் ஒரு முழு சுதந்திரப் போர் நடத்தி ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவுவது ஒன்றுதான் இதற்கு உண்மையான தீர்வாகும்

அதற்குத் தயாராகும் அதே வேளையில், உடனடியாக ஜி.எஸ்.டி சட்டத்தை எதிர்த்துப் போராடுவது அவசியமாகும். இன்று விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் சிறு, குறு தொழில் முனைவோர் தனித்தனியாக போராடி வருகின்றனர். இவ்வாறு தனித்தனியாக போராடினால் நம்மால் வெற்றி பெறமுடியாது. எனவே ஜி.எஸ்.டி வரியை எதிர்த்து மேற்கண்ட அனைத்து வர்க்கங்களும் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் ஒரு முன்னணியை உருவாக்கிப் போராட அறைகூவி அழைக்கிறோம்.

இந்துத்துவ பாசிச மோடி அரசே!
 
* பன்னாட்டு உள்நாடு கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் ஜி.எஸ்.டி வரியை திரும்பப் பெறு!
 
* உலக வர்த்தகக் கழகத்தை விட்டு வெளியேறு!
 
*விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், சிறு குறு தொழில் முனைவோரின் வாழ்வாதாரத்தை பறிக்கும் ஜி.எஸ்.டி-யை எதிர்த்துபோராடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
 
ஆகஸ்ட்-2017

Saturday 26 August 2017

2017 - நக்சல்பாரி தியாகிகள் நினைவு நீடுழி வாழ்க!

 
 
செப்டம்பர்-12-தியாகிகள் நினைவு நாள்!
தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!

 * பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கு சேவைசெய்யும் புதிய காலனிய ஜி.எஸ்.டி-ஐ எதிர்த்துப் போராடுவோம்!
 
*மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்து தேசிய இனங்களை ஓட்டாண்டியாக்குவதே ஜி.எஸ்.டி-வரி!
 
*சாதி,மதவெறியைக் கட்டவிழ்த்துவிட்டு மக்களைப் பிளவுபடுத்தும் இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!

* மக்கள் ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வோம்!
 
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
 தமிழ்நாடு


================================================

முழக்க இணைப்புத் திருத்தம் மேலே:  
 
 
 


செப்டம்பர்-12-தியாகிகள் நினைவு நாள்!
தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!

 * பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கு சேவைசெய்யும் புதிய காலனிய ஜி.எஸ்.டி-ஐ எதிர்த்துப் போராடுவோம்!
 
*மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்து தேசிய இனங்களை ஓட்டாண்டியாக்குவதே ஜி.எஸ்.டி-வரி!
 
*சாதி,மதவெறியைக் கட்டவிழ்த்துவிட்டு மக்களைப் பிளவுபடுத்தும் இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!
 
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
 தமிழ்நாடு

                August                                                                                                                                             2017



Monday 21 August 2017

தோழர் பச்சையப்பன் நினைவேந்தல் கூட்டம்



மக்கள் ஜனநாயக இளைஞர் கழக முன்னணி தோழரும், மார்க்சிய லெனினிய செயல்வீரருமான தோழர் பச்சியப்பன் ஜூன் 9ஆம் தேதி மாரடைப்பால் இறந்தார்.
 
அவருக்கு நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடத்த கழகம் ஆகஸ்டு 7ம் தேதி ஏற்பாடு செய்தது. . ஏகாதிபத்திய எடுபிடி பா.ஜ.க வின் பினாமி எடப்பாடி ஆட்சி அனுமதி
மறுத்ததால் மீண்டும் 20ம் தேதி திட்டமிட்டு அனுமதி பெறப்பட்டது.
 
சிறிய தூறலில் ஆரம்பித்து ,..கொட்டும் மழையிலும்` குடை பிடித்து` மக்கள் கூடிநின்றனர்.
 
தோழர் சின்னவன் ம.ஜ.இ.க சீரியம்பட்டி வரவேற்புரை ஆற்றினார்.
 
தோழர் மாயகண்ணன் ம.ஜ.இ.க தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர் தலைமையேற்றார்.
தோழர் பழனி கொண்டப்பட்டி ம.ஜ.இ.க தோழர் பச்சியப்பன் படத்தை திறந்து வைத்தார்.
 
தோழர் பூபதி ம.ஜ. இ.க கோவை . தோழர் ரண தீபன் ம.ஜ.இ, க தஞ்சை .தோழர் குணளான் வேலுர் மாவட்ட ம.ஜ.இ.க அமைப்பாளர் . தோழர் பெரியண்ணன் ம.ஜ.இ.க கமலாபுரம் . தோழர் சோமு ம.ஜ.இ.க சேலம் மாவட்ட அமைப்பாளர். தோழர் சண்முகம் ம.ஜ.இ.ககடலூர் மாவட்டம் அமைப்பாளார் . தோழர் வெள்ளைச்சாமி ம.ஜ.இ.க திண்டுக்கல் . தோழர் ஞானம் ம.ஜ.இ.க மாநில அமைப்பாளர் . ஆகிய தோழர்கள் சிறப்பாக உரையாற்றினர். தோழர் மனோகரன்  சிறப்புரை ஆற்றினார்
 
 மக்கள் கலை மன்ற தோழர்களின் கலைநிகழ்ச்சி  மக்களை கவரும் வண்ணம் நடைபெற்றது, மக்கள் கலை மன்ற பாடலைப் பாடினார்கள் . 
 
இறுதியாக தோழர் தேன்பழனி நன்றியுரை ஆற்றினார்.
 
நக்சல்பாரி புரட்சியாளர் பச்சியப்பன் நினைவேந்தல் பொதுக் கூட்டம் மிகச்சிறப்பாக நடந்தேறியது. .

Saturday 19 August 2017

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் பச்சியப்பன் நினைவேந்தல் கூட்டம்

 
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் பச்சியப்பன் அவர்களின் நினைவேந்தல் கூட்டம்
 
20-08-2017 திங்கள் - மாலை 5:00 மணி
 பாலக்கோடு பேருந்துநிலையம் - தருமபுரி.
 
தலைமை : தோழர் மாயக்கண்ணன், தருமபுரி மாவட்ட அமைப்பாளர்.
வரவேற்புரை : தோழர் சின்னயன், ம.ஜ.இ.க பாலக்கோடு
 படத்திறப்பு : தோழர் பழனி - ம.ஜ.இ.க தருமபுரி.
 
உரையாற்றுவோர்
 
 தோழர் மனோகரன் ம.ஜ.இ.க சென்னை
 தோழர் பெரியண்ணன் ம.ஜ.இ.க தருமபுரி
 தோழர் சோமு சேலம் மாவட்ட அமைப்பாளர்
 தோழர் குணாளன் வேலூர் மாவட்ட அமைப்பாளர்
 தோழர் சண்முகம் கடலூர் மாவட்ட அமைப்பாளர்
 தோழர் இரணதீபன் தஞ்சை மாவட்ட அமைப்பாளர்.
தோழர் வெள்ளைச்சாமி திண்டுக்கல் - ம.ஜ.இ.க
 தோழர் பூபதி ம.ஜ.இ.க கோவை
 தோழர் ஞானம் மாநில அமைப்பாளர் 
 
நன்றியுரை
 
 தோழர் தேன்பழனி ம.ஜ.இ.க பாலக்கோடு.
 (மக்கள் கலைமன்ற கலைநிகழ்ச்சி நடைபெறும்)
அனைவரும் வருக! அஞ்சலி நல்குக!
 
 
 
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் பச்சியப்பன் அவர்களுக்கு வீரவணக்கம்!


அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயகவாதிகளே!

க்சல்பாரி புரட்சி இயக்கத்தின் முன்னணித் தோழரும் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் செயல்வீரருமான தோழர் பச்சியப்பன் அவர்கள் 2017 ஜீன் 9ஆம் நாள் மாரடைப்பால் காலமானார். நாட்டின் விடுதலைக்காகவும் மக்களின் ஜனநாயகத்திற்காகவும் கர்ஜனை புரிந்துவந்த கம்பீரக் குரல் ஓய்ந்துவிட்டது. ஓய்வறியாத சூரியன் மறைந்துவிட்டது. இந்தியப் புரட்சி இயக்கம் ஒரு முன்னணிப் போராளியை இழந்துவிட்டது.

“எல்லோரும் இறக்கவேண்டியவர்கள்தான். ஆனால் இறப்பு என்பது அதன் முக்கியத்துவத்தில் வேறுபட்டது. மக்களின் நலன்களுக்காக மரணமடைவது இமயமலையைவிட கனமானது. ஆனால் பாசிஸ்ட்டுகளுக்காக உழைத்து, சுரண்டுவோருக்கும் ஒடுக்குமுறையாளர்களுக்காகவும் இறப்பது இறகைவிட லேசானதாகும்.” என்கிற மாவோவின் கூற்றுக்கு இணங்க, மக்களுக்காக வாழ்ந்து மடிந்தவர் தோழர் பச்சியப்பன். ஆம், தோழர் பச்சியப்பன் அவர்களின் மரணம் இமயமலையைவிட கனமானது!.

நக்சல்பாரி புரட்சி இயக்கத்தின் வழிகாட்டுதலில், தருமபுரி மண்ணில் களமாடிய தோழர் பாலன் அவர்களின் புரட்சிகர அரசியல் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு புரட்சிகர இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர் தோழர் பச்சியப்பன். புரட்சிகர இயக்கத்தை ஒழித்துக்கட்ட எம்.ஜி.ஆர் தலைமையிலான தமிழக அரசு நரவேட்டை நடத்திக்கொண்டிருந்த நேரத்தில், பாலக்கோடு-சீரியம்பட்டியில் தோழர் பாலன் உரையாற்றவிருந்த பொதுக்கூட்டத்திற்கு தலைமை ஏற்றவர் தோழர் பச்சியப்பன். தோழர் பாலன் காவல்துறைக் கயவாளிகளால் அடித்துக் கொல்லப்பட்டு தியாகியாகிறார். அடக்குமுறை தாண்டவமாகிறது. தோழர் பச்சியப்பன் அவர்களும் கடும் அடக்குமுறைக்கு உள்ளாகிறார். அரசின் அடக்குமுறை என்ற உலைக்களத்தில் பச்சியப்பன் என்கிற உருக்குவாள் உறுதியேற்றப்படுகிறது. தோழர் பாலனின் ரத்தத்தில் நனைந்த கொடியை கையிலேந்தி, அடக்குமுறைகளுக்கு அஞ்சாத சிங்கமாக அன்று தொடங்கிய தோழர் பச்சியப்பன் அவர்களின் புரட்சிப் பணி அவர் தன் இறுதிமூச்சை நிறுத்திக்கொண்ட நேரம்வரை தொடர்ந்தது.

பள்ளி சென்று முறையாக கல்வி கற்க வாய்பில்லாத, சிறுவிவசாயக் குடும்பத்து இளைஞனாக இருந்தபோது இயக்கத்தில் ஈடுபட்ட தோழர் பச்சியப்பன், தன் கேள்வி ஞானத்தை விசாலப்படுத்திக் கொண்டு, தோழர்கள் முன்வைக்கும் மார்க்சிய லெனினிய தத்துவ அரசியலை கூர்ந்து கவனித்து உள்வாங்கி, அப்படி உள்வாங்கிய அரசியலின் அடிப்படைகளில் ஊன்றிநின்று, அந்தப் புரட்சிகர அரசியலை தனது மக்கள் மொழியில் எங்கேயும் எப்போதும் இடையறாது பிரச்சாரம் செய்தவர் தோழர் பச்சியப்பன்.

தான் ஏற்றுக்கொண்ட லட்சியத்தில் உறுதி, தலைமை மீது அசைக்கமுடியாத விசுவாசம், முன்முயற்சியுடன் கூடிய செயல்பாடு என அளப்பரிய அர்ப்பணிப்பு உணர்வுடன், மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் முன்னெடுத்த எல்லாப் போராட்டங்களிலும் முன்நின்று போராடியவர் தோழர் பச்சியப்பன். பாசிச எதிர்ப்புப் போராட்டங்கள், தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவான போராட்டங்கள், தமிழை ஆட்சிமொழி ஆக்குவதற்கான போராட்டங்கள், தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்கள், சாதி, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள, விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டங்கள் என எண்ணிலடங்கா போராட்டங்களில் முதன்மைப் பங்காற்றியவர். அடக்குமுறைகளுக்கு அஞ்சாது உறுதியாக நின்று போராடியவர். கருணாநிதியின் கபடநாடகமான ‘செம்மொழி மாநாட்டை’ அம்பலப்படுத்தி போராட்டம் நடத்தி, கைதாகி காவல் நிலையத்தில்.கடும் சித்தரவதைகளுக்கு ஆளானபோதும் கொண்ட கொள்கையில்உறுதியாக நின்று மக்களுக்காக தொடர்ந்து தெண்டாற்றியவர் தோழர் பச்சியப்பன்.

“கம்யூனிஸ்ட் என்பவர் விசால உள்ளம் படைத்தவராக இருக்கவேண்டும். அவர் நேர்மையும் ஊக்கமும் உடையவராக இருக்கவேண்டும். புரட்சியின் நலன்களை தனது சொந்த உயிர்போல் கருதவேண்டும். தனது சொந்த நலன்களை புரட்சியின் நலன்களுக்குக் கீழ்படுத்தவேண்டும். எங்கும் எப்போதும் அவர் சரியான கோட்பாட்டின் வழி ஒழுகி, தவறான கருத்துக்கள், செயல்கள் எல்லாவற்றிற்கும் எதிராக சளையாத போராட்டம் நடத்தவேண்டும்.” என்கிற மாவோவின் கூற்றுக்கு இணங்க தவறான கருத்துக்களுக்கு எதிராக - கலைப்புவாத நிலைகளுக்கு எதிராக சமரசமின்றி, சலியாது போராடியவர் தோழர் பச்சியப்பன்.

ம.ஜ.இ.க.வின் புரட்சிகர அரசியல் மக்களிடம் செல்வாக்கு செலுத்தி, இயக்கம் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைக்க ஆயத்தம் ஆன நிலையில் 2004ஆம் ஆண்டுகளில் கோடாரி காம்புகளாக சில புல்லுருவிகள், மார்க்சியத்தோடு பெரியாரிய, அம்பேத்காரிய கருத்துகளை கலப்பது என்கிற கலைப்புவாத நோக்கத்தில் “அகிலம் புத்தகக்கடை” வடிவில் சித்தாந்தக் கலைப்புவாதம் மா-லெ புரட்சி இயக்கத்தில் நுழைய முயன்றபோது, கலைப்புவாதத்திற்கு எதிரான அணிகளின் கலகத்தில்-அமைப்பை காப்பாற்றும் அரிய போராட்டத்தில் முன்நின்றவர் தோழர் பச்சியப்பன்.

“பாதகம் செய்பவரைக் கண்டால்
 பயங்கொள்ளலாகாது பாப்பா
 மோதிமிதித்துவிடு பாப்பா -அவர்
 முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.”

என்கிற பாரதியின் சீற்ற வரிகளுக்குச் செயல்வடிவம் தந்தவர் சீரியம்பட்டித் தோழர் பச்சியப்பன். கலைப்புவாதம், பிழைப்புவாதம், பாலியல் பண்பாட்டுச் சீரழிவு போன்ற புற்று நோய்களுக்கு எதிராக அயராது போராடி அமைப்பைக் காப்பாற்றியவர் தோழர் பச்சியப்பன்.

ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தனக்கு புற்றுநோய் தாக்கியிருப்பதை அறிந்தும், அதுகுறித்து கிஞ்சிற்றும் கவலைப்படாமல், எப்படியும் சாகப்போகிறோம், இருக்கும் குறுகிய காலத்திற்குள் அதிகபட்சமான அரசியல் பணிகளை ஆற்றவேண்டுமென்ற திடசித்தத்தோடு, முன்னிலும் வேகமாய் புரட்சிப் பணியாற்றியவர் தோழர் பச்சியப்பன்.அவரது அந்த செம்மாந்த உழைப்பின் வெற்றி-2017 மே நாளில் பாலக்கோட்டில் நடைபெற்ற மே நாள் பேரணி, பொதுக்கூட்டம்!. ஏகாதிபத்திய காலனியாதிக்கத்திற்கு எதிராக, இந்துத்துவப் பாசிசத்திற்கு எதிராக ம.ஜ.இ.க. முன்வைத்த அரசியலை பாலக்கோடு நகரத்தின் சந்துபொந்துகளில் எல்லாம் பிரச்சாரம் செய்து, உழைக்கும் மக்களையும் சிறுபான்மை இஸ்லாமியப் பெருமக்களையும் பெருவாரியாகத் திரட்டியதில் தோழர் பச்சியப்பன் அவர்களின் பங்கு மகத்தானது.

மார்க்சியம் - லெனினிய அரசியலை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதில் மட்டுமல்ல, தனது சொந்த வாழ்விலும் கம்யூனிச ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்தவர். தன் குடும்பம் முழுவதையும் புரட்சிகர அரசியலில் ஈடுபடவைத்தவர். சாதி தீண்டாமையையும், மத சடங்குகளையும் புறந்தள்ளியவர். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்ற கோட்பாட்டில் உறுதியாக நின்று போராடியவர்.

நார்மன் பெத்யுன் குறித்த தோழர் மாவோவின் மதிப்பீடு, தோழர் பச்சியப்பனுக்கும் பொருந்தும்.

 “தோழர் பெத்யுன் அவர்களின் உணர்வு, தன்னைப்பற்றிய சிந்தனை ஒன்றும் இன்றி, பிறருக்கான அவருடைய பரிபூரணத் தியாகம், தமது வேலையில் அவர் கொண்டிருந்த எல்லையற்ற பொறுப்புணர்சியிலும், தோழர்களின் மீதும் மக்களின் மீதும் அவர் வைத்திருந்த எல்லையற்ற இதய ஆர்வத்திலும் காணப்பட்டது. ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். எள் அளவும் சுயநலமற்ற உணர்வை நாம் எல்லோரும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இந்த உணர்வைக்கொண்டு ஒவ்வொருவரும் மக்களுக்குப் பயனுள்ளவர்களாக வாழமுடியும். ஒருவருடைய திறமை பெரிதாக அல்லது சிறிதாக இருக்கலாம். ஆனால் அந்த உணர்வு ஒருவருக்கு இருந்தால், அவர் உன்னத சிந்தையும் தூய்மையும் உடையவராக, ஆத்மபலமுடைய, கொச்சை நப்பாசைகளைக் கடந்த ஒரு மனிதனாக-மக்களுக்குப் பயனுள்ள ஒரு மனிதனாக இருப்பர்.”

தோழர் பச்சியப்பன் அவர்களிடமிருந்து பாடம் கற்போம்!.
மக்களுக்காக வாழ்ந்து மடிந்த அவரது தியாகத்தைப் போற்றுவோம். இறுதிமூச்சு இருந்தவரை அவர் ஊன்றிநின்ற மார்க்சிய - லெனினிய மாவோ சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தை வளர்த்தெடுப்போம்!
புதியகாலனி ஆதிக்கத்தையும் இந்துத்துவப் பாசிசத்தையும் வீழ்த்திட, மக்கள் ஜனநாயக அரசமைத்திட தோழர் பச்சியப்பன் பெயரால் சூளுரைப்போம்.
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு.
 
ஆகஸ்ட்                                                                                                                      2017