Friday, 24 April 2009

Indian Parliament Election- May2009

இந்திய பாராளுமன்றத் தேர்தல் 2009
நாட்டின் இறையாண்மையை ஏகாதிபத்தியங்களுக்கு அடகுவைக்கும் ஒப்பந்தங்களைத் தடுக்க அதிகாரமற்ற போலிப் பாராளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்!
* உலக முதலாளித்துவ நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது சுமத்துவதற்குச் சேவை செய்பவையே அனைத்து பாராளுமன்றக் கட்சிகள்!
* ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டை அடிமைப்படுத்தும் அரசியல், பொருளாதார, இராணுவ ஒப்பந்தங்களைத் தடுப்பதற்கு அதிகாரமற்றவையே - அரசியல் சட்டமும் போலிப் பாராளுமன்றமும்!

* ‘தேசிய ஒருமைப்பாடு’, ‘நிலையான ஆட்சி’ பேசும் காங்கிரஸ் அணியும் - ‘இராமன், ரொட்டி’ பேசும் இந்துத்துவா பா.ஜ.க அணியும் ‘மத சார்பின்மை’ பேசும் திருத்தல்வாத அணியும், முதாளித்துவ நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது சுமத்துவதற்கு சேவை செய்யும் அணிகளே!

* தி.மு.க, அ.தி.மு.க கூட்டணிகள் ஈழத்தமிழருக்காக கண்ணீர் வடிப்பது தேர்தல் சந்தர்ப்பவாதமே!

* திருத்தல்வாதிகள் – தரகுமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ மத்திய அரசில் பங்கு கொள்வது – பாட்டாளிவர்க்கத்திற்குச் செய்யும் துரோகமே!

* போலிப் பாராளுமன்றத்தேர்தலைப் புறக்கணிப்போம்!

* சோவியத் வடிவ மக்கள் ஜனநாயக அரசமைக்க புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்- தமிழ்நாடு-24-04-2009

2 comments:

  1. samaran correctly says that all parliamentary parties are puppets of american imperialists and they all are the representatives of brokerage capitalists of india-

    ReplyDelete
    Replies
    1. Cheran Vanjinathan @
      * போலிப் பாராளுமன்றத்தேர்தலைப் புறக்கணிப்போம்!

      * சோவியத் வடிவ மக்கள் ஜனநாயக அரசமைக்க புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!

      இந்த வெற்றி முழக்கத்தால் இதுவரை உங்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது என்று சுயவிமர்சனம் செய்ததுண்டா?

      லெனினது பதிலையே உங்களுக்கு அளிக்கிறேன்:-
      "பாட்டாளி வர்க்கம் அதன் குறிக்கோள்களை வந்தடைய வகை செய்யும் சாதனம் தொழிலாளர்களது சோவியத்துக்களே அன்றி நாடாளுமன்றமல்ல என்பதை இக்கடிதத்தின் ஆசிரியர் நன்கு உணருகிறார். இதுவரை இதனை உணரத் தவறியோர், அவர்கள் மெத்தப் படித்தவர்களாகவும் மிகுந்த அனுபவமுடைய அரசியல்வாதிகளாகவும் மனப்பூர்வமான சோஷலிஸ்டுகளாகவும் நன்கு கற்றுத் தேர்ந்த மார்க்சியவாதிகளாகவும் நேர்மையான குடிமக்களாகவும் நல்ல தந்தையராகவும் இருந்த போதிலும், கடைந்தெடுத்த பிற்போக்குவாதிகளே ஆவர். ஆனால் சோவியத்துக்களுக்கு ஆதரவான அரசியல்வாதிகளை நாடாளுமன்றத்தின் உள்ளேவரச் செய்யாமல், உள்ளிருந்தே நாடாளுமன்ற முறையைச் சிதைவுறச் செய்யாமல், நாடாளுமன்றத்தைக் கலைத்திடுவதற்காக சோவியத்துக்கள் மேற்கொள்ளப் போகும் பணியில் சோவியத்துக்களின் வெற்றிக்காக நாடாளுமன்றத்தினுள்ளிருந்து வேலை செய்யாமல், நாடாளுமன்றத்தின் மீது சோவியத்துக்கள் வெற்றி பெறுவது சாத்தியம்தானா என்று இக்கடிதத்தின் ஆசிரியர் கேட்கவே இல்லை - இவ்வாறு கேட்க வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு ஏற்படவில்லை."
      ("இடதுசாரி" கம்யூனிசம்-இளம்பருவக் கோளாறு - லெனின் - தொகுதி 8 - பக்கம்284)

      இந்த லெனின் கூற்றின் அடிப்படையில் தான் நான் பேசிவருகிறேன். லெனின் கூற்று இன்று பொருந்தாது என்றால் அதனை விளக்குங்கள். நான் நாடாளுமன்றத்தின் வலது போக்கையும் இடது போக்கையும் சேர்த்தே விமர்ச்சித்து வருகிறேன். நான் கூறிவருகிற இரண்டையும் பொருட்படுத்தாமல் சிலி போன்ற நாடுகளின் அனுபவத்தை கூறுவதின் நோக்கம் எனக்குப் பிடிபடவில்லை.

      //இந்தியாவில் எந்த வகையுள் பயன்படுத்த முடியாத அளவில் சிரழிந்து பொய் உள்ளது// சீரழிந்த நாடாளுமன்றத்தைக் கூட அம்பலப்படுத்த திறனற்று இருப்பதேன்?

      நீங்கள் கூறிப்பிடுகின்ற போலி நாடாளுமன்றம் செயற்பாட்டுத் தன்மையில் இருக்கிறது. நம்மை ஒடுக்கிக் கொண்டிருக்கிறது. அதனை எதிர்ப்பதற்கும், ஒழிப்பதற்கும் திறமற்று ஒதுங்கி இருப்பதேன்?

      போராட்டமற்ற மார்க்சியம் தான் போலி மார்க்சியம். மக்களிடம் இருந்து விலகி நிற்பது எந்த விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லை.

      Delete