Wednesday, 23 March 2011

தமிழக சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்! மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!


தமிழின விரோத, புதிய காலனிய தாசர் சோனியா காங்கிரஸ் கும்பலை தமிழகத்தில் முறியடிப்போம்!

*  ஈழவிடுதலைப் போரை நசுக்கிய சோனியா கும்பலுக்கு தமிழகத்தில் இடமில்லை!

*  தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்காகவும் தமிழை ஆட்சிமொழி பயிற்று மொழியாக்கவும் போராடுவோம்!

*  மாநில ஆட்சி அதிகாரங்களை ஏகாதிபத்தியங்களுக்குத் தாரைவார்ப்பதை அனுமதியோம்!

*  வேளாண் நிலங்களை பன்னாட்டுக் குழுமங்களிடம் ஒப்படைப்பதை எதிர்ப்போம்!  நிலச் சீர்த்திருத்தத்திற்காகப் போராடுவோம்!

*  கல்வி, மருத்துவம், சுகாதாரத்தை தனியார்மயமாக்கி மக்கள் உரிமைகளைப் பறிப்பதை எதிர்ப்போம்!

*  வாக்குவங்கிக்கான சாதிவாத தேர்தல் கூட்டணிகளை எதிர்ப்போம்!

*  சோனியா, மன்மோகன், கருணா ஊழல் குமபலுக்கு மாற்று ஜெயா அத்வானி கும்பல் அல்ல!

*  தமிழக சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்! மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!


மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்     தமிழ்நாடு       மார்ச் 2011

Monday, 14 March 2011

மகா ஊழல் அரசை ஒழிப்போம்,மக்கள் ஜனநாயக குடியரசை அமைப்போம்!

சோனியா-மன்மோகன்-கருணா கும்பலின் ஊழல் ஆட்சியைத் தூக்கி எறிவோம்,ஊழலை ஒழிக்க மக்களுக்கு அதிகாரம் தரும் மக்கள் ஜனநாயக அரசமைக்கப் போராடுவோம் என முழங்கி மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் பொதுக்கூட்டம்.


தமிழ்நாடு வேலூர் மாவட்டம் சுந்தரம்பள்ளிக் கிராமத்தில் இம்மாதம் 5ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இப்பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் ஜீவா முன்னிலையில், வேலூர் மாவட்ட ம.ஜ.இ.க அமைப்பாளர் தோழர் க.குணாளன் தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் தோழர்கள் மனோகரன், குணாளன், மாநில அமைப்பாளர் ஞானம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

தருமபுரிமாவட்ட அமைப்பாளர் தோழர் மாயக்கண்ணன் நன்றியுரை ஆற்றினார்.

மக்கள் கலைமன்ற உறுப்பினர்கள் கலை நிகழ்ச்சி நிகழ்த்தினர்.
 
இப்பொதுக்கூட்டத்தில் பங்குகொண்ட மக்களையே இப்புகைப் படங்களில் காண்கிறீர்கள்.இப்பொதுமக்கள் மத்தியில் பரவலாக விநியோகிக்கப்பட்ட அரசியல் பிரச்சாரத் துண்டுப் பிரசுரம் வருமாறு.

.
நன்றி தகவல்:ம.ஜ.இ.க.ஊடகப் பொறுப்பாளர்