அமெரிக்காவின் ஜெனிவா தீர்மானம் இலங்கை மீதான மேலாதிக்க நோக்கம் கொண்டதே!
சென்னையில் செம்பதாகை ஏந்தி செந்தமிழர் ஆர்ப்பாட்டம்!
ஈழத்தமிழின அழிப்புப் போருக்கு தொடர்ந்து ஆதரவளித்துவரும் சோனியா மன்மோகன் கும்பலைக் கண்டித்து சென்னை சைதை பனகல் மாளிகை அருகாமையில் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத் தோழர்களும்,மக்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நேற்றைய தினம் (22-03-2012) வியாழன் மாலை 4.00 மணிமுதல் 6,00 மணிவரை இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எஞ்சியுள்ள ஈழத்தமிழின `ஆடுகள்` நனைவதைக்கண்டு `சோனியா மன்மோகன் ` ஓநாய்கள் கதறுவதான கருத்துச் சித்திரப் பதாகை ஏந்தப்பட்டிருந்தது.
1. இன அழிப்பு போர்க்குற்றவாளி இராஜபட்சேவை கூண்டிலேற்றுவோம்!
2. ஈழத்தமிழின அழிப்புப் போருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் சோனியா, மன்மோகன் கும்பலும் போர்க்குற்றவாளிகளே!
3. அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பேரால் இராஜபட்சேவுக்கு ஆதரவளிப்பது சிங்களப் பேரினவாத பாசிசத்தையே வலுப்படுத்தும்!
4. ஒடுக்கப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட நாடுகளின் ஒன்றுபட்ட போராட்டமே ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்கும்!
5.சிங்களப் பேரினவாத இராணுவப் பாசிசத்திலிருந்து ஈழத்தமிழரை விடுதலை செய்யப் போராடுவோம்!
6. தமிழீழப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சிங்கள இராணுவத்தை வெளியேற்றப் போராடுவோம்! நிலம், நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றில் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கு!
7. தமிழர் பகுதிகளிலுள்ள சிங்களக் குடியேற்றங்களை அகற்றப் போராடுவோம்!
8. வடக்கு, கிழக்கு பகுதிகளை இணைத்து, அதை ஈழத்தமிழர்களின் தாயகமாக அங்கீகரிக்கப் போராடுவோம்!
9. ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிப்போம்!
10. சிங்களப் பேரினவாத பாசிசத்திற்கு எதிரான இலங்கைவாழ் இரு இனமக்களின் ஒன்றுபட்ட போராட்டமே ஜனநாயகத்தை நிலைநாட்டும்.
ஆகிய முழக்கங்களைப் பதாகைகளாக ஏந்தியவண்ணம் மக்களும் தோழர்களும் ஆர்ப்பரித்தனர்.ஆர்ப்பாட்டக் களத்தை நின்று கவனித்து கடந்து சென்ற ஆயிரக்கணக்கான மக்களுக்கு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
கழகத்தின் அண்மைக்கால வெளியீடுகளான,
இந்திய அரசே! போர்க்குற்றவாளி இராசபட்சேவை கூண்டிலேற்று!,
நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ ஊழலை எதிர்த்து மக்கள் இயக்கத்தைக் கட்டியமைப்போம்!,
சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை முறியடிப்போம்!
முல்லைப் பெரியாற்றில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாப்போம்!
ஆகிய நூல்கள் விற்பனை செய்யப்பட்டன.
மக்கள் ஜனநாயக இளைஞர் கழக மாநில அமைப்பாளர் தோழர் ஞானம் முழக்கங்களை விபரித்து சிறப்புரையாற்றினார். நன்றி தெரிவித்து மாலை 6.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஓய்ந்தது.
உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருவோம்!
சமரன்
படியுங்கள்! பரப்புங்கள்!!
No comments:
Post a Comment