ஒபாமா வருகையின் நோக்கம்:
• அமெரிக்காவின் உலக மேலாதிக்கம் சரிந்துவரும் நிலையில், தனக்குப் போட்டியாக சீனா வளர்ந்து வரும் சூழ்நிலையில், சீனாவை எதிர்த்து அமெரிக்கத் தலைமையில் ஆசிய-பசிபிக் இராணுவ, பொருளாதாரக் கூட்டமைப்பில் பங்குகொள்ள இந்தியாவை இணங்க வைப்பது.
• அமெரிக்க பன்னாட்டு கம்பெனிகளின் நலன்களுக்காக இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை அமல்படுத்த இந்திய அரசை நிர்ப்பந்திப்பது.
• அமெரிக்க-இந்திய இராணுவ ஒப்பந்தத்தை மேலும் பத்து ஆண்டுகள் தொடர்வதற்கு உத்தரவாதப்படுத்துவது.
• இராணுவத் தளவாட உற்பத்தியில் அமெரிக்கப் பன்னாட்டு கம்பெனிகளின் ஏகபோகத்தை உத்தரவாதப்படுத்துவது.
• அமெரிக்க அணு உலை முதலாளிகளின் கொள்ளை இலாபத்திற்காக அணு உலை விபத்து இழப்பீட்டுச் சட்டத்தை நீக்க வற்புறுத்துவது.
• இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ் மதவெறி அமைப்புகளுக்கு அமெரிக்க முதலாளிகள் நிதி உதவி வழங்குவது மூலம், மோடி கும்பலின் கரங்களை வலுப்படுத்துவது.
• ஜனநாயகத்தை பாதுகாப்பது என்ற பேரால் அமெரிக்காவுக்கு அடிபணிய மறுக்கும் அரசுகளை கவிழ்த்தல், மற்றும் ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கு ஆதரவளிக்க இந்திய அரசை இணங்க வைப்பது.
இத்தகைய அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்க நோக்கங்களுக்கு இந்திய அரசை நிர்ப்பந்திக்கவே ஒபாமாவின் வருகை.
எனவே கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள அறைகூவி அழைக்கின்றோம்!
* அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை எதிர்ப்போம்!
* ஜனநாயகத்தின் பேரால்,மேலாதிக்கத்திற்குப் பணிய மறுக்கும் அரசுகளைக் கவிழ்ப்பதை எதிர்த்துப் போராடுவோம்!
*ஆசிய-பசிபிக் மண்டலத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவ முயலும் ஒபாமாவின் கனவைத் தகர்ப்போம்!
* புதிய தாராளக் கொள்கைகளின் மூலம் இந்தியத் துணைக்கண்டத்தை புதிய காலனியாக்கும் முயற்சிகளை முறியடிப்போம்!
* ஏகாதிபத்திய யுத்த வெறியன் ஒபாமா – இந்துத்துவப் பாசிச மோடி கூட்டணியை முறியடிப்போம்!
No comments:
Post a Comment