Sunday 2 September 2012

கூடங்குளம் அணு உலை குறித்த எமது நிலைப்பாடு (சமரன் வெளியீடு)


``----------எனவே நாட்டின் ஆற்றல் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு அணு மின்சாரம் உள்ளிட்ட ஆற்றல் துறை முழுவதையும் அரசே ஏற்று நடத்தவேண்டும். நாட்டை நாசமாக்கிவரும் உலகமய, தனியார்மயக் கொள்கைகளைக் கைவிட்டு சுயசார்பு பொருளாதாரக் கொள்கைகளைச் செயல்படுத்திட வேண்டும். அதுவே அணுசக்திப் பிரச்சினைக்கான உடனடித் தீர்வாக இருக்கமுடியும். ஆற்றல் துறையில் அணுசக்தி உள்ளிட்டு அனல், புனல், சூரிய ஒளி, காற்று இவைகளைக் கொண்ட ஒரு சுயசார்பு மின் திட்டத்தைச் செயல்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், அவர்களுக்குச் சேவை செய்யும், நாட்டை புதியகாலனியாக மாற்றிவரும் உலகமய, தனியார்மயக் கொள்கைகளை ஒழித்துக்கட்ட வேண்டும். மேலும் இத்தகைய சுயசார்பு மின் திட்டத்தை நிலவுகின்ற அரசமைப்புக்குள்ளேயே தீர்க்கவும் முடியாது. எனவே இந்தியாவின் தரகுப்பெரு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கங்களை தூக்கியெறிந்து ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவுவது ஒன்றுதான் வழியாகும். அது நீண்டகாலத் திட்டமாகும். உற்பத்தி  சக்திகளின் வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், தேசிய முதலாளிகள் மற்றும் பணக்கார விவசாயிகள் உள்ளிட்ட ஒரு மக்கள் சக்திதான் - ஐக்கிய முன்னணிதான் - இன்றைய அணுசக்தித் துறை நெருக்கடி உள்ளிட்ட அனைத்து நெருக்கடிகளுக்கும் தீர்வு காணும். சுயசார்பு மின் திட்டத்தைச் செயல்படுத்தும்.``
கூடங்குளம் அணு உலை குறித்த எமது நிலைப்பாடு (சமரன் வெளியீடு)
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
=========
முழு விரிவான குறு நூலைப் படிக்க:

படியுங்கள்!                          பரப்புங்கள்!!                பங்களியுங்கள்!!!

1 comment:

  1. அணு உலை ஆபத்தானது மட்டு அல்ல, அதன் கழிவுகளை ப்பல்லாயிரம் ஆண்டுகள் பாதுகாக்க வேண்டுமா ?
    தற்போது உள்ள பிளாஸ்டிக் கஊபஅகழி அல்ல முடியாத அரசு அணு கழிவுகளை ...............?????

    ReplyDelete